Pagetamil
சினிமா

தமிழ் சினிமாவின் மற்றொரு ஜோடி விரைவில் திருமணம்?

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் விரைவில் திருமணம் முடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் அண்மைக்காலமாக டேட்டிங் செய்து வருவதாகவும் தற்போது விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஜோடி முதலில் ஒரு நெருங்கிய நண்பர்கள் சூழ நிச்சயதார்த்த விழாவை நடத்தவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே முழு வீச்சில் தொடங்கியுள்ளன. திருமண தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து யாகவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போதில் இருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்து வந்துள்ளது.

ஜூலை 2020 இல் ஆதியின் தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கலந்துகொண்டபோது இருவரும் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. சில மாதங்களுக்குப் பிறகு, இருவரும் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து ஒன்றாக வெளியேறுவதைக் காண முடிந்தது. இது அந்த செய்திகளை மேலும் உறுதிப்படுத்தியது.

இருவரின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!