சமூக ஊடகத்தில் ஜனாதிபதியை விமர்சித்து பதிவிட்டதால், பெண் தொகுப்பாளினி ஒருவரை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது.
பரமி நிலேப்னா ரணசிங்க என்பவரே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்து தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் பதிவிட்டதற்காக அவரை ரூபவாஹினி பணி நீக்கம் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஜனாதிபதி குறித்த பதிவே பணி நீக்கத்திற்கு காரணம் என பரமி நிலேப்னா ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, தொலைக்காட்சி தொகுப்பாளரின் இடைநிறுத்தம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், பரமி நிலேப்னா ரணசிங்கவை பணி இடைநிறுத்தம் செய்ய ரூபவாஹினி எடுத்த தீர்மானத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1