26.2 C
Jaffna
December 24, 2024
Pagetamil
உலகம்

‘வரலாற்றில் எந்தப் பக்கத்தில் நிற்கிறோம் என்பது முக்கியம்’: இந்தியாவிற்கு சொன்னது அமெரிக்கா!

ரஷ்யாவிடமிருந்து இந்தியா மலிவு விலை கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறுவது ஆகாது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரைத் தொடர்ந்து புதிய திருப்பமாக ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. மேலும், ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை மலிவு விலையில் வாங்க இந்தியன் ஓயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதே உலக நாடுகளுக்கு எங்களின் வேண்டுகோள். இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது என்பது நாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறும் செயலாகாது என்றே கருதுகிறோம்.

ஆனால், வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் ஒவ்வொருவரும் எந்தப் பக்கத்தில் நாம் நிற்கிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம். ரஷ்ய தலைமையை நாம் ஆதரித்தால் அது உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிப்பதாகவே கருதப்படும்” என்று கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment