25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

யாழில் மற்றொரு அரச மரத்தையும் கண்டனர் பிக்குகள்: பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்திற்கு ஆபத்து!

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசியல்வாதிகளும் பிரதேச மக்களும் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் விநாயகர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. இந்த ஆலய வளாகத்தில் உயரமாக வளர்ந்த அரச மரம் காணப்படுகின்றது.

அண்மைக் காலமாக வழிபாடு என்ற போர்வையில் படையினரின் உதவியுடன் பௌத்த பிக்குகள் அடிக்கடி இந்த ஆலயத்திற்கு வந்து சென்றனர். இதையடுத்து நாளை  (17) பௌர்ணமி தினத்தன்று இங்குள்ள அரச மரத்தடியில் படையினரின் உதவியுடன் பிக்குகள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முனைப்புக் காட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும் பௌத்த பிக்குகள் தெரியப்படுத்தி உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

பிக்குகளின் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தி பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காக இன்று புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஆலய வளாகத்தில் பொதுக் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment