25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
உலகம்

இரண்டு பிள்ளைகளுடன் காருக்கு தீயிட்டு தற்கொலை செய்த தமிழ் பெண்: அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்!

அவஸ்திரேலியாவில் தமிழ் தாய் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் காருக்கு தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

திங்கள்கிழமை காலை 11.45 மணியளவில் பெர்த்தின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஜான் கிரஹாம் ரிசர்வ் பகுதிக்கு ஹோண்டா ஜாஸ் கார் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.

தீ அணைக்கப்பட்ட பிறகு, பொலிசார் 40 வயதுடைய தாய், அவரது 10 வயது மகள், 8 வயது மகனின் சடலங்களை மீட்டனர்.

இந்த மரணங்களில் வேறொரு தரப்பு சம்பந்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு,   மரணங்களை கொலை-தற்கொலையாக பார்க்கிறோம் என்று பொலிசார் கூறினர்.

தமிழக பின்னணியுடைய குடும்பமே உயிரிழந்தது.

தாய் செவிலியராகப் பணிபுரிந்தார். கடந்த ஐந்து வருடங்களாக குடும்பம் பெர்த்தில் வசித்தது.

குழந்தைகளின் தந்தை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றதாகவும், கத்தாரில் உள்ள தோஹாவில் விமானத்திற்காக காத்திருந்த போது, தகவல் அறிந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

குடும்ப உறவு சாதாரணமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1

இதையும் படியுங்கள்

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

Leave a Comment