அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் அதிகபட்சம் ரூ. 2,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அண்மைய எரிபொருள் அதிகரிப்புக்கு ஏற்ப விலையை அதிகரிக்க வேண்டுமாயின் மாதாந்த கட்டணத்தை 45 முதல் 100 வீதம் வரை அதிகரிக்க வேண்டுமென சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொதுமக்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை என்பதனை கருத்தில் கொண்டு பெயரளவிலான அதிகரிப்பை மேற்கொண்டு;ளதாக தெரிவித்தார்.
தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பொது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் நோக்கில் அல்ல எனவும் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.