26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவனின் பிறப்புறுப்பில் பெப்பர் ஸ்பிரே தெளிப்பு: சிறுவர் இல்லத்தில் கொடூர தண்டனை!

திவுலப்பிட்டிய, கடவல பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவனின் ஆணுறுப்பில் பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டதால்  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தமைக்கு தண்டனையாக சிறுவர் இல்ல விடுதி மேற்பார்வையாளர் இந்த தண்டனை வழங்கியது தெரிய வந்தது.

பாதிக்கப்பட்ட சிறுவன் பற்றிய தகவல்களை பொலிசார் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

சிறுவனை குளியலறைக்கு அழைத்து சென்ற விடுதி மேற்பார்வையாளர், ஆடைகளை களைந்து, சிறுவனின் ஆணுறுப்பில் பெப்பர் ஸ்பிறே தெளித்துள்ளார்.

அந்த இல்லத்தில் சுமார் 25 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை மேற்பார்வையாளர் துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திவுலப்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு திவுலபிட்டிய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால், சிறுவர் இல்ல காப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறவிடாதீர்கள்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

east tamil

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

9 மாத சிறை: நீதிமன்றத்துக்குள் ரகளை செய்த ஞானசாரர்!

Pagetamil

Leave a Comment