25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
மலையகம்

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவன்!

பொகவந்தலாவ- ​சென் மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (13) மாலை 04.30 மணியளவில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பாரதிதர்ஷன்(18) என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டார்.

சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, கிரிக்கெட் சுற்று போட்டியைப் பார்க்கச் சென்ற பாரதிதர்ஷன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர் தேடிய போதே, மரக்கறி தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற ஆறரை அடி ஆழமான கிணறு ஒன்றில் மாணவன் சடலமாக கிடந்துள்ளதை கண்டுள்ளனர்.

அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உதட்டுப்பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொகவந்தலாவை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொட்டகலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து

east tamil

16 வயது மாணவி மாயம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

கண்டி வத்தேகம படுகொலை: ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

east tamil

ஹட்டனில் திடீர் சுற்றிவளைப்பு: 130 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

Leave a Comment