அமைச்சரவை வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, எரிவாயு பெற வரிசையில் நிற்பவர்கள் மத்தியிலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாராந்த அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு நடப்பது வழக்கம். இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர், எரிவாயு வரிசையில் நின்றபடி இணைய வழியாக கலந்து கொண்டார்.
2 சிலிண்டர்களில் தனது மடிக்கணினியை வைத்து, அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாக வருகிறது..
தற்போது நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்த ஊடகவியலாளர், அரசாங்கம் எதிர்காலத் திட்டத்தை வகுக்கவில்லையா என கேள்வி எழுப்பினார்.
செய்தியாளருக்குப் பதிலளித்த இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பத்தரன, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பல அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ள எந்த அரசாங்கமும் விரும்பவில்லை என்று கூறினார்.
மேலும், எந்த அரசும் தனது ஆட்சிக் காலத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அவதிப்படுவதைப் பார்க்க விரும்பவில்லை என்றார்.