ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப்பெண் ஞா.ஹம்சிகா (27) கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
இன்று மன்றில் சிஐடியினர் மன்றில் முன்னிலையாகி மனுத் தாக்கல் செய்தனர். இதன் போது தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த நபர்ரே கர்பிணிப் பெண் கொலையின் முதலாவது பிரதான சந்தேகநபர் ஆவார்.
ஆகவே கொலை இடம்பெற்ற இடத்தில் மேலதிக விசாரணையை மேற்கொள்ளவும், கொள்ளையிட்ட நகைகள் விற்பனை செய்த நகைக்கடைக்கு சந்தேக நபரை அரைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கோரப்பட்டது.
இவ் மனுவை ஏற்றுக் கொண்ட நீதவான் எதிர்வரும் 28ம் திகதியன்று சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
உரும்பிராயை சேர்ந்த பழைய இரும்பு சேகரிப்பாளரான நபர், கர்ப்பிணிப் பெண்ணின் சங்கிலியை அபகரிப்பதற்காக கொலை செய்ததாக வாக்குமூலமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.