தமிழ் அரசியல் கட்சியொன்றின் பிரமுகர் தொடர்பான சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இன்று காலை முதல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியொன்றின் மக்கள் பிரதிநிதியொருவர் தொடர்பான சர்ச்சைக்குரிய புகைப்படங்களே பகிரப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு அப்பாலான உறவில் குறிப்பிட்ட பிரமுகர் இருப்பதாக கூறி, அது தொடர்பான சில புகைப்படங்கள் மற்றும் சட் செய்த ஸ்கிரீன் ஷொட் என்பன இன்று காலையில் அனாமதேய மின்னஞ்சல் ஊடாக ஊடகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பிரமுகர் ஐ லவ் யூ என்று தகவல் அனுப்ப மறுமுனையில் என்னை இனிமேல் யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என அனுப்பப்பட்ட பதிலும், மற்றொரு சட் பதிவில் புகைப்படம் அனுப்புமாறு பிரமுகர் கோர, இருட்டுக்குள் படுத்திருப்பதாக மறுமுனையில் பதிலும் அனுப்பப்பட்ட ஸ்கிரீன் ஷொட்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சில புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
எனினும், அதன் உண்மைத்தன்மையை தமிழ்பக்கம் சுயாதீனமாக உறுதி செய்யவில்லை.
ஆயினும், இந்த செய்தியும், படங்களும் சிலரால் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.