சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்;தித்து, நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக இலங்கை தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
“இலங்கையிடமிருந்து நிதி உதவிக்கான கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் பெறவில்லை என்றாலும், பணியாளர்கள் கோரப்பட்டால் விருப்பங்களைப் பற்றி விவாதிக்க தயாராக உள்ளனர்” என்று நோசாகி கூறினார்.
நாட்டிற்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ள நிலையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை பல வருடங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 2.31 பில்லியன் டொலராக இருப்பதால், எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் நாடு போராடி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட கால மதிப்பாய்வு வெளியீட்டில்,
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் “நம்பகமான மற்றும் ஒத்திசைவான” மூலோபாயத்தை செயல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.