26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிக்கு கடத்தப்பட்டதாக முறைப்பாடு!

பிலியந்தலை, மடபான பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்குவொருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் (12) 7 பேர் கொண்ட குழுவினரால் வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட அவர், அன்று மாலை ஹாலி எல பகுதியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் விசாரணையொன்றிற்காக சென்று திரும்பும் வழியில்,  26 வயதான பிக்குவின் முகம், கைகளை கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஹாலி எல பகுதியில் இறக்கிவிடப்பட்டதாக கூறியுள்ளார்.

பிக்கு கடத்தப்பட்டமை குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளுக்காக இந்த விடயம் சிஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தாம் கடத்தப்பட்டு வீதியில் விட்டுச் சென்றதாக முறைப்பாடு செய்த பங்களாதேஷ் பிக்கு பதுளை பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

Leave a Comment