25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

ராஜபக்ச குடும்ப சகவாசமே இனிமேல் வேண்டாம்: விமல் அதிரடி!

ராஜபக்ச குடும்பத்திற்கு இனி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நியூஸ் ஃபெர்ஸ்ட்டுக்கு வழங்கிய நேர்காணலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, ராஜபக்ச அணியுடன் இணைந்து மீண்டும் ஒருபோதும் போட்டியிடப் போவதில்லை என்றார்.

எதிர்காலத்தில் இந்த குழுவுடன் அரசியல் முன்னணியில் ஈடுபடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தற்போதைய சூழ்நிலையின் விளைவாக நாமால் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட முடியும் என நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் நாமல் ராஜபக்சவுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், அது அவரது எதிர்கால அரசியல் பயணத்தை பாதிக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment