எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இல்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனை தெரிவித்தார்.
குற்றம் மற்றும் ஊழலில் ஈடுபடாத நபர்களுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக உள்ளது என்றார்.
ஜே.வி.பி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பிலான கூற்றுக்களை அவர் மறுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக்காலத்தில் பொது ஆணையை காட்டிக்கொடுத்ததால், அவருடன் ஜே.வி.பி கைகோர்க்காது எனவும் லால்காந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருடன் இணையும் திட்டம் உள்ளதா என ஜே.வி.பி.யிடம் குழுக்கள் கேள்வி எழுப்பியதாகவும், அத்தகைய திட்டம் இல்லையென்றும் அவர் மேலும் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1