27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா

இலங்கையிலிருந்து தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல் பொலிஸ்காரர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்!

இலங்கையில் தேடப்பட்டு தமிழகத்திற்கு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கொழும்பு பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தராக அத்தநாயக சமிந்த பிரதீப் குமார் பண்டார (32) என்பவர் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அந்த காவல் நிலையத்தில் இருந்த சுமார் 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமாகியது. பின்னர் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது. பொலிஸ் நிலையத்திலிருந்த போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவத்தில், அந்த நிலையத்தில் பணியாற்றிய அத்தநாயக சமிந்த பிரதீப் குமார் பண்டார என்ற உத்தியோகத்தரை பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இலங்கை பொலிஸாரிடம் இருந்து தப்பித்துக் கொள்ள பிரதீப்குமார் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி கடல் வழியாக தனுஷ்கோடி பகுதிக்கு வந்தார்.

அவரை மெரைன் பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை (10) ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் 2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவரிடம் குற்றப்பத்திரிக்கை ஆவண நகல்கள் வழங்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க நீதிபதி விஜய்ஆனந்த் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மீண்டும் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment