26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
ஆன்மிகம்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்- 2022: கன்னி ராசி

கன்னி ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

அழகிய் உடல்வாகு நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!!

கிரகநிலை

கேது பகவான் தனவாக்கு ஸ்தானத்திலும் – சனி பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் – குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் – ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றிடுவீர்கள். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலை பளு அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.

பொருளாதார நிலை

குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும், முன்கோபத்தைக் குறைப்பதும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் – வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப்பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்தியோகம்

பணியில் சற்று வேலைப் பளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்துகொண்டால் வீண் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். புதிதாக வேலைதேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

அரசியல்

பெயர் புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்துகோள்ளவேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும்.

விவசாயிகள்

பயின் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும் போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டிவரும். நீர்வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்கமாட்டார்கள். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பண வரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் – அசையா சொத்துக்களால் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.

கலைஞர்கள்

மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் சிரிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல பெயரினை வாங்கித்தரும். வரவேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும்.

மாணவ-மாணவியர்

கல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்றுவிட முடியும். சிறுசிறு இடையூறுகள், தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு உண்டாகும். நீண்டநாள் பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் பெரிய கெடுதியில்லை.

உத்திரம் 2, 3, 4 பாதம்

நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.

அஸ்தம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது வீண்பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

சித்திரை 1, 2, பாதம்

செலவு செய்ய நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment