மன்னாரில் எரிவாயு இல்லாததால் உணவகங்கள் பல பூட்டு!

Date:

மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற எரிவாயு தட்டுப்பாட்டினால் அனேகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வார காலமாக மன்னாரில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (9) மன்னார் நகரில் உள்ள அனேகமான உணவகங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தி வந்த எரிவாயு முடிவடைந்த நிலையில் பல உணவகங்கள் மூடப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் எரிவாயுவை பயன்படுத்தும் மக்களும் எரிவாயு தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இன்மையால் வாகன உரிமையாளர்கள் பெரல்கள் மற்றும் கான்களுடன் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.

அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச வாகனங்கள் மற்றும் முப்படையினருக்கு மாத்திரமே டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்