25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

கிண்ணியா துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய 3 பேர் கைது: துப்பாக்கியும் மீட்பு!

திருகோணமலை, கிண்ணியா – நடுஊற்று பகுதியில் நேற்று(07) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஒருவரான கிண்ணியா-சூரங்கல் பகுதியைச் சேர்ந்த பீர் முகம்மது முகம்மது முஜீப் (30) மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றி வருபவர் எனவும், இவர் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் கிண்ணியா-முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையில் சாரதியாக கடமையாற்றி வரும் நூர் முஹம்மது ரபீக் (34) மற்றும் ஹமீது லெப்பை ஹசுறுல்லா (42) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 09 ரவைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

நடுஊற்று பகுதியிலுள்ள களப்புக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டில் கிண்ணியா-குட்டி கராச்சி பகுதியை சேர்ந்த தாஜிது முகமது வசீம் (30) சாகுல் ஹமீது முகம்மது ரமீஸ் (33) ஆகிய இருவரும் காயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு தரப்பினருக்கிடையிலான தகராறே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

east tamil

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

Leave a Comment