இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பயணித்துக் கொண்டிருந்த போதே, முன் சக்கரம் கழன்று தனியாக ஓடிய பரபரப்பு சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் முன் பக்க சக்கரம், பரந்தன் பகுதியில் அச்சில் இருந்து திடீரென விலகியது.
இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1