26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

கொத்து ரொட்டி மட்டக்களப்பில் தோன்றியது; காப்புரிமையை இலங்கை பெற வேண்டும்: பெரமுன எம்.பி!

கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

இத்தாலியில் உள்ள பீட்சா மற்றும் அமெரிக்காவின் ஹாம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளுக்கு ஒத்ததாக கொத்து ரொட்டியை மாற்றுவதற்கு இலங்கை செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.

கொத்து ரொட்டி மட்டக்களப்பிலிருந்து தோன்றியதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த டொக்டர் ஹேரத், தற்போது அதில் ஐஸ்கிரீம் கொத்து உட்பட பல வகைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்த அவர், அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதனைப் பயன்படுத்தலாம் என்றார்.

இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதுடன், இலங்கைக்கு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் எனவும் கலாநிதி ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு பின்னணி வெளியானது!

Pagetamil

விளையாட்டு வினையாது: வெளிநாட்டிலுள்ள கணவனை பயமுறுத்த இளம் பெண் ஆடிய நாடகத்தால் நேர்ந்த சோகம்!

Pagetamil

பருத்தித்துறை கடலில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு

east tamil

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

Leave a Comment