மன்னார் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து மன்னார் தாராபுரம் பிரதான வீதியில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (6) மதியம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து சுடார் 1 கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும்,கைப்பற்றப்பட்ட ஐஸ் ரக போதை பொருளும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1