இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இளம் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த பெண் பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், பயணிகளின் காலணியின் அடியில் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 தங்க துண்டுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பயணியின் காலணிக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்க்பட்டிருந்த 393 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ரூபாய் 18.84 இலட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1