தென் கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால், சுமார் 5,000 பேர், வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயில் 20க்கும் மேற்பட்ட வீடுகளும் 9 கட்டடங்களும் சேதமடைந்தன.
கிழக்குக் கரையோர மாநிலமான Uljinஇல் உள்ள மலைப்பகுதியில் காட்டுத்தீ தொடங்கியது.
அணுவாலை ஒன்றுக்கு அருகே காட்டுத்தீ பரவியதாகவும் பிறகு அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சாம்சியோக் நகரிலும் காட்டுத்தீ பரவியுள்ளது.
அங்கே நாட்டின் ஆகப் பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிலையம் அமைந்துள்ளது.
சுமார் 3,300 ஹெக்டயர் அளவிலான வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் முயன்றுவருகின்றனர்.
இருப்பினும் அங்கு வீசும் பலத்த காற்று அவர்களின் பணிக்குத் தடையாக விளங்குகிறது.