இன்றைய வானிலை!

Date:

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் இன்று (04ஆம் திகதி) 0530 மணிக்கு வட அகலாங்கு 8.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.00 E இற்கும் அருகில் திருகோணமலை கரையிலிருந்து 190 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்ததாகவும் கரையிலிருந்து விலகியும் நகர்ந்து அடுத்த 48 மணித்தியாலங்களில் வட தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

செம்மணியில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விபரம்!

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப்...

18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்