Pagetamil
இலங்கை

எரிபொருள் சிக்கலை தீர்க்காமல் பாடசாலைகளை திறப்பதால் நெருக்கடி!

நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாணாமல் இம்மாதம் 7ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் இல்லாததால் பல பாடசாலை வாகனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடியினால் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு அறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல கவலைகள் இருப்பதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போலி அடையாளத்தில் நாட்டுக்குள் நுழைந்த கஜேந்திரன் கைது!

Pagetamil

சிறைச்சாலை முன்னாள் அதிகாரி சுட்டுக்கொலை

Pagetamil

அனுராதபுரம் காமுகனை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Pagetamil

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

Pagetamil

ஜேவிபியின் நம்பிக்கை இது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!