நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாணாமல் இம்மாதம் 7ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் இல்லாததால் பல பாடசாலை வாகனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடியினால் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு அறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல கவலைகள் இருப்பதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1