அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அமைச்சரவையில் அமைச்சராக கடமையாற்ற முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை தனது கடமைகளில் இருந்து விலகுவதாகவும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நான் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய மாட்டேன், ஆனால் அமைச்சரவைக் கூட்டத்திற்குச் செல்லமாட்டேன், எந்த அமைச்சுப் பொறுப்புகளையும் நிறைவேற்ற மாட்டேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விரும்பினால் அவரையும் பதவி நீக்கம் செய்யலாம் எனவும் அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதற்கு முன்னர் கைத்தொழில் அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சராகவும் இருந்தார்.
இரண்டு அமைச்சர்களும் அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.