ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 13 நிதிகள் மிகை கட்டணச் சட்டத்தில் இருந்து நீக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன இதனை உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, ஏ. எச். எம்.நவாஸ் மற்றும் .அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் லிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மிகை கட்டணச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்து உத்தரவிடுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் கடந்த 23ஆம் திகதி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.