ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னாள் மனைவிக்கு சொந்தமான பிரான்ஸ் பங்களாவின் வெளிப்பகுதியில் உக்ரைன் தேசியக் கொடியின் வர்ணம் பூசப்பட்டுள்ளதுடன், உக்ரைன் ஆதரவு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் முன்னாள் மனைவி லியுட்மிலா புடின். 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் ரஷ்ய தொழிலதிபர் ஓச்செரெட்னியை திருமணம் செய்து கொண்டார்.
உக்ரைன் ஆதரவு வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
நுழைவாயிலின் முன்புறத்தில் உக்ரைன் கொடிகள் வரையப்பட்டு ‘F*** Poutine’ என எழுதப்பட்டிருந்தது. எனினும், மறுநாள், அவை அழிக்கப்பட்டன.
இந்த பங்களாவை 2013 இல் ரஷ்ய தொழிலதிபர் Ocheretny வாங்கினார். அதே ஆண்டு லியுட்மிலா புட்டினிடமிருந்து விவாகரத்து செய்தார்.
எனினும், அந்த தம்பதி அங்கு வசிக்கவில்லை. அது புனரமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வீடு புடினுக்கு சொந்தமானது எனக் குறிப்பிடும் வீடியோக்கள் TikTok இல் உள்ளன.