எதிர்வரும் ஐந்து நாட்களுக்குப் பின்னர் மின்வெட்டை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்றிரவு (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்காக மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், புகையிரத திணைக்கள களஞ்சியசாலைகளிலும் எரிபொருளை சேமிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1