உக்ரைன் தலைநகர் கீவ் குடியிருப்பாளர்கள் தமது வீட்டு கூரைகளில் சந்தேகத்திற்கிடமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளதா என சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக கீவ் நகரில் சந்தேகத்திற்கிடமான குறியீடுகள் பரவலாக வரையப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வான் தாக்குதலிற்கான குறியீடாக இது இருக்கலாமென கருதப்படுகிறது.
உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய குழுக்கள் இந்த சின்னங்களை வரைவதாக ஏற்கனவே உக்ரைன் அறிவித்திருந்தது. தற்போது அந்த சின்னங்கள் நகரம் முழுவதும் பரவலாக காணப்பட்டுள்ளது.
கீவ் உள்ளூர் நிர்வாகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட எச்சரிக்கையில், “கூரையை அணுகக்கூடிய உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்கள், ஏதாவது சின்னம் வரையப்பட்டுள்ளதா என கூரையை அவசரமாக சரிபார்க்கவும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்,”குறியீடுகள் வரையப்பட்டிருந்தால் அதன் மீது வர்ணம் பூசலாம் அல்லது பிரதிபலிப்பு நாடா மூலம் மூடலாம், அடையாளங்களை அழிக்கலாம், அழுக்கு போன்ற பொருட்களால் அவற்றை மறைக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.