தற்போது இலங்கையில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரஜைகளின் சுற்றுலா வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை இந்த முன்மொழிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விசா நீட்டிப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, தற்போது 11,463 ரஷ்ய பிரஜைகளும் 3,993 உக்ரைன் பிரஜைகளும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1