பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் கையெழுத்துப் போராட்டமும் கவனயீர்ப்பு போராட்டமும், கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் இந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்-முஸ்லிம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கையெழுத்துப்பெறும் போராட்டத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர்.