கண்டி, பன்வில ராக்ஷாவ தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று (26) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் தேயிலை தூள் மற்றும் இயந்திரங்களுடன் தேயிலை தொழிற்சாலையின் ஒரு பகுதி முற்றாக எரிந்துள்ளது.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஏராளமான தேயிலை தூள் எரிந்து நாசமானதுடன் இயந்திரங்கள் மற்றும் கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பன்வில பொலிஸார், பன்வில பிரதேச சபை மற்றும் பிரதேச மக்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் மாலையில் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும் தொழிற்சாலை ஏற்கனவே பாரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இந்த தீயினால் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றாலும், அது பெரிய தொகையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1