சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிறு சத்திரசிகிச்சைக் கூடம் மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் கலந்து கொண்டு கூடத்தை திறந்து வைத்தார்.
கெளரவ அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சி. எம். மாஹீர், விஷேட அதீதியாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருதுதிக்குழு செயலாளர், வைத்தியர்கள் ,தாதிய பரிபாலகர் ,நிருவாக உத்தியோகத்தர், தாதியர்கள் மற்றும் ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
திறந்து வைத்த வெள்ளிக்கிழமை அன்று 6 சிறு சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1