திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணின் தலையை வெட்டியெடுத்த கொடூரனிற்கு வழங்கப்பட்ட தண்டனை!

Date:

பாகிஸ்தானை உலுக்கிய நூர் முகதம் என்ற இளம் பெண் கொலை வழக்கில், குற்றவாளியான ஜாஹிர் ஜாஃபருக்கு மரண தண்டனை விதித்து இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவரை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாகக் கண்டறிந்த நீதிமன்றம், அவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.200,000 அபராதமும் விதித்தது.

ஜாஹிரின் வீட்டு ஊழியர்களான முகமது இப்திகார் மற்றும் முகமது ஜான் – இந்த வழக்கில் இணை குற்றவாளிகள் – 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜாஹிரின் பெற்றோர் மற்றும் நிறுவன ஊழியர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அதா ரப்பானி தீர்ப்பை அறிவித்தார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது ஜாஹிர், அவரது தந்தை ஜாகிர் ஜாஃபர், தாய் அஸ்மத் ஆதம்ஜி மற்றும் பிற சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் (PPC) பிரிவு 302(b) (முன்கூட்டிய கொலை) கீழ் ஜாஹிருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மரண தண்டனை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

PPC இன் பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) கீழ் அவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 200,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நூரின் சட்டப்பூர்வ வாரிசுக்கு ரூ0.5 மில்லியன் வழங்க ஜாஹிருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. செலுத்தாத பட்சத்தில், அந்தத் தொகை நில வருவாய் நிலுவைத் தொகையாகவும், வசூலிக்கத் தவறினால், ஆறு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

கூடுதலாக, கொலைக்காக கடத்தியதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.100,000 அபராதமும் (பிரிவு 364) மற்றும் சிறை வைத்தமைக்காக ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை (பிரிவு 342) விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனைகள் யாவும் சமநேரத்தில் அனுபவிக்க வேண்டும்.

இப்திகார் மற்றும் முகமது ஜான், ஆகியோருக்கும் தனித்தனிக்குற்றச்சாட்டில் பல சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டது. அவர்களும் அனைத்து தண்டனைகளையும் சமநேரத்தில் அனுபவிப்பார்கள்.

பாகிஸ்தானின் வடகொரியா, கசகஸ்தான் நாடுகளிற்கான தூதராக பணியாற்றியவர் சௌகத் முகதம். அவரது மகள் நூர் முகதம் (27).

பாகிஸ்தானின் பணக்கார குடும்பங்களில் ஒன்றின் வாரிசான ஜாஹிர் ஜாஃபர், ஜூலை 20, 2021 அன்று இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் நூர் முகதமை கொடூரமாக படுகொலை செய்தார்.

தன்னை திருமணம் செய்ய மறுத்தமையாலேயே இந்த கொலையை புரிந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பொலிசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி,

ஜூலை 19ஆம் திகதி ஈதுல் ஆஷாவிற்கு ஆடு வாங்குவதற்காக சௌகத் முகதம், ராவல்பிண்டிக்கு சென்றிருந்தார். அவரது மனைவி தையல்காரரிடம் துணி எடுக்க வெளியே சென்றிருந்தார். மாலையில் அவர் வீடு திரும்பியபோது, ​​இஸ்லாமாபாத்தில் உள்ள தங்கள் வீட்டில் மகள் நூர் இல்லாததை கண்டார்.

மகளது செல்போன் நம்பர் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டிருப்பது தெரிந்ததும், அவரை தேடும் பணியில் பெற்றோர் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து, நூர் தனது பெற்றோருக்கு போன் செய்து சில நண்பர்களுடன் லாகூர் செல்வதாகவும், ஓரிரு நாட்களில் திரும்பி வருவேன் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் ஜாஹிரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. இரண்டு குடும்பங்களும் அறிமுகமானவை. நூர் தன்னுடன் இல்லை என்று ஜாஹிர் தெரிவித்தார்.

ஜூலை 20 அன்று இரவு சுமார் 10 மணியளவில், சௌகத் முகதமிற்கு கோசார் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. நூர் கொலை செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவரை போலீசார் F-7/4 இல் உள்ள ஜாஹிரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நூர் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டதைக் கண்டார்.

இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு ஜாஹிர் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது பெற்றோர் மற்றும் வீட்டு ஊழியர்களும் ஆதாரங்களை மறைத்து குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார்” என்ற குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டனர். நூரின் தந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் விசாரணையின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டனர்.

விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரத்தின் படி, பிரதான குற்றம் சாட்டப்பட்ட ஜாஹிர் ஜாஃபரின் கூட்டாளிகளின் அனுசரணையின் காரணமாக நூர் ஆறு உயிர்காக்கும் வாய்ப்புகளை இழந்தார்.

கொலை நடந்த விதத்தையும் பொலிசார் மன்றில் விபரித்தனர்.

.ஜூலை 18 அன்று நூர், F-7/4 இல் உள்ள ஜாஃபரின் வீட்டிற்கு வந்தார். பாதுகாவலர் அவரை உள்ளே அனுமதித்தார். வீட்டிலிருந்த வளர்ப்பு நாயும் நூருடன் அறிமுகமானதை வெளிப்படுத்தியது.

ஜூலை 20 அன்று, ஜாஃபரும் நூரும்  சண்டையிட்டனர். ஜாஃபரின் திருமண முன்மொழிவை நூர் நிராகரித்ததே காரணம். பின்னர், கொலையாளி ஜாஃபர், அந்தப் பெண்ணை ஒரு அறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்தார். பின்னர் கொன்றார்.

தனது திருமண முன்மொழிவை நூர் நிராகரித்ததால், அவரை ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும் குற்றவாளி ஜாஃபர் கூறினார். சிறை வைக்கப்பட்டதால் நூர் கோபமடைந்துள்ளார். பொலிசிற்கு முறைப்பாடளிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, ஜாஃபர் இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததோடு, யாரையும் உள்ளே வரவோ அல்லது அவளை வீட்டை விட்டு வெளியேறவோ அனுமதிக்க வேண்டாம் என்று வீட்டு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். நூர் அங்கு அடைக்கப்பட்டு, கொல்லப்பட்டதை தெரிந்திருந்தும், ஜாஃபரின் பெற்றோர் அதை பொலிசாருக்கு தெரிவிக்கவில்லை.

சம்பவத்தன்று, ஜாஃபர் கராச்சியில் இருந்த தனது தந்தையை தொலைபேசியில் நான்கு முறை தொடர்பு கொண்டார். இதன்போது, நூர் உயிருடனிருந்தார்.

கொலை செய்த பின்னரும், தந்தையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.  அப்போதும், தந்தையார் ஜாஃபரை ஆசுவாசப்படுத்த முயன்றார்: “நீ கவலைப்பட வேண்டாம், என்னால் இதை சமாளிக்க முடியும். உன்னை மீட்கவும், இறந்த உடலை அப்புறப்படுத்தவும் ஆட்களை அனுப்புகிறேன்” என்றார்.

கொல்லப்படுவதற்கு முன் நூர் தப்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். மாடியிருந்து தரைத்தளத்திற்கு குதித்த போது, அவர் கீழே விழுந்து கிடக்கும் காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.

அவர் தடுமாறியபடி வாசலுக்கு ஓடிச்சென்ற போது, வீட்டுப் பணியாளர்கள் அவர் தப்பிக்க விடாமல் தடுத்தனர்.

ஜாஃபர் அவரை மீண்டும் அறையில் தடுத்து வைத்தார். நூர் மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டு, கழிவறையின் ஜன்னலுக்கு வெளியே குதித்து பிரதான வாயிலை நோக்கி ஓடினார் என்று அறிக்கை கூறுகிறது. இருப்பினும், பாதுகாவலர் அவருக்கு உதவுவதற்கு பதிலாக தப்பிச் செல்வதை தடை செய்தனர்.

சாட்சியங்களையும் உடலையும் மறைக்க, ஜாஃபர் தனது பங்கு வர்த்தக நிறுவனமாக தெரபிவொர்க்ஸ் ஊழியர்கள் 5 பேரை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்தார்.

கொலை செய்வதற்கு முன்னர் நூர் கடுமையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டார்.

கொலையாளி ஜாஃபர் பாகிஸ்தான்- அமெரிக்க குடியுரிமையுள்ளவர். வழக்கு விசாரணையின் போது, அவருக்கு மனநலம் சரியில்லையென நாடகம் ஆடினார். ஆனால் அவரால் தப்பிக்க முடியவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்