அடுத்த பருவத்திற்கு தேவையான உரங்களை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் விவசாய அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உலக சந்தையில் உரத்தின் விலை உயர்வினாலும், இலங்கையில் இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், வர்த்தகர்கள் உரத்தை அதிக விலைக்கு. விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.
தன்னிச்சையாகச் செயற்படும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேவேளையில் அரசாங்கம் அதனைக் கடுமையாக ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் குழுவிடம் தெரிவித்தார்.
உலக சந்தையின் விலையை கணக்கில் கொண்டு இரசாயன உரத்தின் விலையை நெறிப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குழுவிடம் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இயற்கை உர மானியம் வழங்கும் அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.