மத்துகமவில் கடந்த 15ஆம் திகதி மூன்று பிள்ளைகளின் தாயான 39 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடை குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் இன்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் மத்துகம பிரதேசத்தில் உள்ள குற்றக் கும்பல் ஒன்றின் தலைவரான ஷான் அரோஸின் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பெண் அரச அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயற்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக மத்துகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1