உக்ரைனில் 11 விமானப் படை தளங்கள் உள்பட 74 பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் இன்று காலை முதல் உக்ரைன் மீது தொடர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவுக்குள் நுழைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, உக்ரைன் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷொய்கு அறிவித்துள்ளார்.
11 விமானப் படை தளங்கள் உள்பட 74 உக்ரைன் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் இராணுவ வீரர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவின் பல விமானங்கள், ஹெலிகொப்டர்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில படையினரை உயிருடன் சிறைப்பிடித்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
எனினும், விமான இழப்பு செய்திகளை ரஷ்யா மறுத்துள்ளது. விமானியின் தவறு காரணமாகவே ஒரு எஸ்யு-25 ஜெட் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.