26.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

இ.போ.சவிற்கு எரிபொருள் சிக்கல் இல்லை!

பொது போக்குவரத்து சேவைகளை தொடர்ச்சியாக சீரான முறையில் வழங்குவதற்காக, இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்க அரசாங்கம் தலையிட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது

ஓர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்களை உடனடியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச இதனை தெரிவித்தார்.

பற்றாக்குறை ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், எனினும் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபைக் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட ஸ்வர்ணஹன்ச, ஏதேனும் ஒரு டிப்போவில் பற்றாக்குறை ஏற்பட்டால் அருகில் உள்ள டிப்போவில் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றார்.

தற்போது 4,750 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், டீசலுக்கு ஒவ்வொரு நாளும் ஓர்டர்கள் வழங்கப்படுகின்றன.

எனவே தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டதாக ஸ்வர்ணஹன்ச கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுர அரசுக்கு யாழில் எச்சரிக்கை விடுத்த பட்டதாரிகள்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

அடையாள அட்டையின்றி பக்கத்து கடைக்கு சென்றவரை கைது செய்த பொலிசார் இடமாற்றம்!

Pagetamil

தண்டவாளத்தில் செல்பி எடுத்த தாயும், மகளும் ரயில் மோதி பலி

Pagetamil

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

Leave a Comment