Pagetamil
இலங்கை

இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

நேற்று 30 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,116 ஆக அதிகரித்துள்ளது.

21 ஆண்களும் 9 பெண்களும் நேற்று உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு ஆண் 30 வயதுக்கு குறைவானவர் என்றும், 6 ஆண்களும் ஒரு பெண்ணும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

14 ஆண்களும் 8 பெண்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

அத்துடன், இன்று 1,208 நபர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 641,786 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 329 நபர்கள் இன்று தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,912 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, தற்போது 17,758 பேர்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

பலுகஸ்வெவவில் சிசுவை கொலை செய்த தாய் கைது

east tamil

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

Pagetamil

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

Leave a Comment