நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்து தெரிவித்த போது, 50 வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், நேற்றைய தினம் 15-20 வீதமான பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு தனியார் பேருந்து தொழிற்துறையில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த விஜேரத்ன, இதனால் பொதுமக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு ரயில் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
செனவிரத்ன கூறுகையில், அடுத்த சில நாட்களுக்கு இயக்குவதற்கு போதுமான அளவு டீசல் கையிருப்பு இலங்கை ரயில்வேயிடம் உள்ளது என்றார்.