24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
உலகம்

முள்ளம் பன்றியுடன் ‘சேட்டை’விட்ட நாய்க்கு ஏற்பட்ட கதி!

முள்ளம்பன்றியுடன் ‘சேட்டை’ விட்ட நாய்க்கு ஏற்பட்ட கதி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள அரராஸ் நகராட்சியில் இந்த சம்பவம் நடந்தது.

அட்ரியானோ பெர்டோலின் என்பவர் வளர்த்த தோர் என்ற நாய், பெப்ரவரி 20 அன்று காலை இந்த கோலத்துடன் வீட்டுக்கு வந்தது.

அதன் முகத்தில் நூற்றுக்கணக்கான முள்ளம்பன்றியின் முட்கள் காணப்பட்டன.

மூன்று வயதுடைய அந்த நாய், ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக முள்ளம் பன்றியுடன் சேட்டை விட்டு, தாக்கப்பட்டுள்ளது.

அட்ரியானோ பெர்டோலின் தற்போது வேலையில்லாமல் இருக்கிறார். முட்கள் ஏறிய நிலையில் காணப்பட்ட நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் சிகிச்சைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.

டொக்டர் ஜோஸ் ராபர்டோ அபோலாரி என்பவர், நாய்க்கு சிகிச்சையளித்து, காப்பாற்றியுள்ளார்.

அவர் நாயை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று, செலவுகளுக்கு உதவினார். பின்னர் தோரை வீட்டிற்கு அழைத்து வந்தார் என்று அட்ரியானோ கூறினார்.

ஒரு வருடத்தில் முள்ளம்பன்றியுடன் இந்த நாய் சண்டையிடுவது இது இரண்டாவது முறையாகும்.

பிப்ரவரி 2021 இல் முதல்முறையாக முள்ளம்பன்றியிடம், தோர் வாங்கிக் கட்டியிருந்தது.

தற்போது, தோர் தாக்கிய முள்ளம்பன்றி என்ன நிலையில் இருந்தது என்பது தெரியவரவில்லை

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

நேபாளத்தில் நிலநடுக்கம்

east tamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

Leave a Comment