சரத்குமாரின் 150வது படத்துக்கு ‘தி ஸ்மைல் மேன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள தொடர் ‘இரை’. ‘அஹா’ ஒடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இத்தொடருக்குப் பிறகு சரத்குமார் நடிக்கவுள்ள 150வது படத்தை ஷ்யாம் – ப்ரவீன் ஜோடி இயக்கவுள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் சரத்குமார் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படம் குறித்து ஷ்யாம் – ப்ரவீன் ஜோடி கூறும்போது, “படத்தின் சரத்குமார் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் தன் நினைவுகளை முழுமையாக இழக்கும் முன் ஒரு முக்கிய வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு த்ரில் அனுபவமாக இருக்கும்” என்றனர்.
Happy to associate with Magnum Movies for my 150th film, directed by @SyamPraveen2 titled as #THESMILEMAN
Wishing the team all the best.@magnum_movies @GavaskarAvinash @iniyahere #Sijarose @sreesaravanandp @Sanlokesh pic.twitter.com/2xME2ymlTW
— R Sarath Kumar (@realsarathkumar) February 21, 2022
இப்படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்ரீ சரவணன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.