26 C
Jaffna
December 19, 2024
Pagetamil
உலகம்

அவசரமாக கூடியது ஐ.நா பாதுகாப்புச்சபை!

கிழக்கு உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்ததுடன், அங்கு “அமைதியைப் பேண” அங்கு துருப்புக்களை அனுப்புவதாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் கூடியுள்ளது.

நெருக்கடிக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண ஐ.நா அவசரக் கூட்டத்தைத் தொடங்கி, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சிப் பகுதிகளை அங்கீகரிப்பதற்கான ரஷ்யாவின் முடிவு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கான சமீபத்திய முன்னேற்றங்களின் தாக்கங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை “பெரும் கவலையை” வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு உக்ரைன் அழைப்பு விடுத்திருந்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்த அறிவிப்பு “உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் தூண்டுதலற்ற மீறல்” என்று அமெரிக்கா கூறியது மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்திற்கான உக்ரைனின் அழைப்பை ஆதரித்தது.

ரஷ்யாவின் எல்லையையொட்டிய டொன்பாஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் உள்ள சுமார் நான்கு மில்லியன் மக்கள் வசிக்கும் பிரிவினைவாதப் பகுதிகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டாம் என்றும்,  ‘மின்ஸ்க்’ அமைதி ஒப்பந்தத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகள் பலமுறை ரஷ்யாவை எச்சரித்தன.

எனினும், ரஷ்யா அதை பொருட்படுத்தாமல், பல வாரங்களாக உக்ரைனின் எல்லைகளைச் சுற்றி தனது படைகளை குவித்து வருகிறது..

இதேவேளை, ரஷ்யாவின் புதிய நகர்வின் பின் இன்று அதிகாலை நாட்டு மக்களிற்கு உரையாற்றிய உக்ரைனிய  ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா சமாதானப் பேச்சுவார்த்தைகளை முறியடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவிற்கு எதிராக செயல்பட உக்ரைன் அதன் நட்பு நாடுகளிடமிருந்து “தெளிவான மற்றும் பயனுள்ள” நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறது என்று அவர் நாட்டிற்கு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

ரஷ்ய அணுசக்தி படைகளின் தளபதி குண்டுவெடிப்பில் பலி

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment