பல்வேறு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வரும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றன.
தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித, நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் கம்மன்பிலவின் கூற்று தவறானது என்றார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் 16 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ள போதிலும், விலைகளை அதிகரித்தால் எரிபொருள் நுகர்வு குறையும் என்பதால், எரிபொருளின் விலையை அதிகரிப்பது டொலரை மிச்சப்படுத்தும் நோக்கமாக இருப்பதாக அமைச்சர் கூறியதாக பாலத தெரிவித்தார்.
இவ்வாறு முரண்பட்ட கருத்துகளை தெரிவித்திருந்தால் தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் பாரிய சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ஆனந்த பாலித தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களை மறைத்து வைப்பது குற்றமாகும் என்பதால், அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டுமென பாலித தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 20 மாதங்களுக்கும் மேலாக உலக சந்தையில் எரிபொருள் விலை குறைப்பினால் அரசாங்கம் நன்மையடைந்து வருவதால் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தை விலைகள் ஆரம்பத்தில் ஜனவரி 2020 இல் குறைக்கப்பட்டு 2021 டிசம்பரில் மேலும் குறைக்கப்பட்டது அதன் பின்னர் அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.
மேலும், அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையே திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளுக்குக் காரணம் என ஆனந்த பாலித தெரிவித்தார்.
எரிசக்தி நெருக்கடி இல்லை ஆனால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது என்றார்.
2021 நவம்பர் 15 ஆம் திகதி பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் 90,000 மெட்ரிக் தொன் நாப்தா மற்றும் உலை எண்ணெய் இருப்பதாக அமைச்சர் கம்மன்பில கூறியதாக ஆனந்த பாலித கூறினார்.
நாப்தா மற்றும் உலை எண்ணெயை உண்மையான பெறுமதியில் 50%க்கும் குறைவான விலையில் வெளிநாட்டுக்கு விற்பனை செய்தமையே இதற்குக் காரணம் என பாலித தெரிவித்தார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது பங்குகளை நிர்வகிக்கத் தவறியதன் காரணமாக பொதுமக்கள் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வதாகத் தெரிவித்த அவர், மின்சாரசபைக்கு எரிபொருளை வழங்குவது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பாகும்.
தற்போதைய நிலைமைக்கு அமைச்சர் மற்றும் அரசாங்கமே பொறுப்பு என பாலித தெரிவித்துள்ளார்.