தனது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
அமைச்சர் பதவிகளில் இருந்து விலகுவதற்கான காரணங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் இராஜாங்க அமைச்சர் முன்வைப்பார் என தெரியவந்துள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை உற்பத்தி தரகர்களுக்கு உரிமம் வழங்கும் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மற்றும் ரப்பர் மறு நடவு மானியச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1