சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்று (20) இடம்பெற்று வருகிறது.
வடமராட்சி, கரணவாய், கொலின்ஸ் மைதானத்தில் இந்த மாநாடு நடந்து வருகிறது.
கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பிரதானிகள் நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, துமிந்த சில்வா மற்றும் சுரேன் ராகவன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


