நீண்ட கால அடிப்படையில் எரிபொருளை கடனுக்காக பெற்றுக்கொள்வதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைமைச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என்றார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 95 மில்லியன் ரூபாவை செலுத்த முடியாத இலங்கை மின்சார சபை எவ்வாறு லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை கடனாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்கா ஐஓசி குறுகிய காலத்திற்கு கடனில் எரிபொருளை வழங்கும் என்று கூறிய ஜெயலால், கடன் ஒப்பந்தம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இருக்கும் என்றும் கூறினார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்று கடன் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களை லங்கா ஐஓசி பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் அனல் மின் நிலையங்களுக்கான கோரிக்கைகள் ஒரு நிபந்தனையை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.
இலங்கையின் எரிபொருள் மற்றும் எரிசக்தித் தொழில்களுக்கு இந்தியா உரிமை கோர முயல்வதாக ஜெயலால் மேலும் தெரிவித்தார்.